Friday, July 24, 2015

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் முகமூடி அணிந்து கொண்ட ஆசிர்வாதம்: கெஹெலிய ரம்புக்வெல்ல !

Friday, July 24, 2015
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் முகமூடி அணிந்து கொண்ட ஆசிர்வாதம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.அரசாங்கம் கடந்த குறுகிய காலத்தில் தேவைக்கு அதிகமாகவே தனது இயலாமையை காட்டியிருப்பதால், தீர்மானம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
 
62 லட்சம் மக்கள் நல்லாட்சிக்காக வாக்களித்தனரே அன்றி 43 ஆசனங்களை கொண்டிருந்த ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கவோ, அமைச்சரவையை நியமித்து அரசாங்கத்தை முன்னெடுக்கவோ அல்ல.
 
தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு அறிந்து கொண்டதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைத்தார்.
ரணில் விக்ரமசிங்க இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், இரண்டு பொதுத் தேர்தல்கள் மற்றும் 24 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்த தலைவர்.
 
100 நாள் அரசாங்கம் 180 நாட்கள் ஆட்சியில் இருந்த போதிலும் கடந்த 6 மாதங்களில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment