Friday, July 24, 2015
திருடன், திருடன் என கூறி கைது செய்யப்படும், குறைந்தபட்சம் ஒரு அரசாங்க அதிகாரியின் மோசடி தொடர்பிலான விசாரணையின் முடிவுகளை கூட வெளியிடாத தற்போதைய அரசாங்கத்தின் பிரதமரே முழு திருடன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நானும், மஹிந்த ராஜபக்சவும் வசிப்பது மிரிஹான பிரதேசத்தில், அப்பிரதேசத்திற்கு விடுதலை புலிகள் பயன்படுத்திய வெள்ளை வான் ஆயுதங்களுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
தமிழ் நாட்டில் சயனைட் குப்பிகளுடன் 04 புலிகள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் இலங்கையர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறான நிலைமையின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பாட்டுள்ளது.
அன்று வெள்ளை வான் அச்சம் நாட்டை ஆட்டிப்படைத்தது. இன்று வெள்யை வான் சிக்கிய போது சோபித்த தேரர், சிவில் அமைப்பினர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தூதுவர்கள் ஏன் இது குறித்து பேசாமல் அமைதியாக இருக்கின்றார்கள்.
திருடர்கள் என கூறி அரசாங்க அதிகாரிகளை கைது செய்தார்கள். விசாரணைகளை நடத்தினார்கள். எனினும் விசாரணைகளின் முடிவுகளை மக்களுக்கு கூறவில்லை.
ரணில் விக்ரமசிங்க என்பவர் வெறும் திருடன் அல்ல பெரிய திருடன்.பொய்களை மாத்திரமே கூறி மக்களை ஏமாற்றியுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment