Friday, July 24, 2015

தேர்தல் சுவரொட்டிகளை இராணுவ வாகனம் ஒன்றில் கொண்டுச் சென்ற இரு நபர்கள் கைது!

Friday, July 24, 2015
கெபத்திகொல்லாவ பிரதேசத்தில் இராணுவ வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இலக்கத் தகட்டினை போலியான முறையில் பதிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் பாரிய அளவான தேர்தல் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான ஒருவருடைய சுவரொட்டிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 4 ஆயிரத்து 500க்கும் அதிகமான சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பிரதி அமைச்சராக இருந்து தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வீரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.             
 
இராணு வாகனத்தில் இலக்கத் தகடு எவ்வாறு மாற்றப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சந்தேக நபர்களை  கெப்பத்திகொல்லாவ மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment