Thursday, July 23, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை!

Thursday, July 23, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்;ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பிரதமர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு கண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் பிரதமர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழங்காவிட்டால், மஹிந்தவை பிரதமராக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க நேரிடும் என அவர் ஜனாதிபதியை எச்சரித்துள்ளார்.

தாம் ஓர் சட்டத்தரணி எனவும், 19ம் திருத்தச் சட்டத்திலும் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவுடையவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாரர்ளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஸவே பிரதமராக பதவி வகிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்பதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களினால் மட்டுமே மஹிந்த பிரதமராவதனை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மதித்து செயற்படுபவர் என்றால் மஹிந்தவையே பிரதமராக நியமிக்க வேண்டுமென, மறைமுகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment