Thursday, July 23, 2015

இலங்கையர் உள்ளிட்ட அகதிகள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசின் கொள்கைக்கு எதிர்க்கட்சி ஆதரவு!

Thursday, July 23, 2015
இலங்கையர் உள்ளிட்ட அகதிகளின் படகுகளை வந்தவழியே திருப்பி அனுப்பும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைக்கு, அந்த நாட்டின் எதிர்கட்சியும் ஆதரவளிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரலிய அரசாங்கத்தின் இந்த கொள்கைக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்கட்சியான தொழில் கட்சி கருத்துக்களை முன்வைத்து வந்தது.

இந்த நிலையில் தொழில்கட்சியின் யாப்பில், இந்த அகதிகள் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை சேர்க்குமாறு அகதிகள் செயற்பாட்டுக் குழுக்கள் கோரி வருகின்றன.

எனினும் இதற்கு தொழில்கட்சி மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் அகதிகள் படகுகள் குறித்து விவாதம் ஒன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் போது அகதிப் படகுகளை வந்தவழியே திருப்பி அனுப்புவது குறித்த கொள்கை தொடர்பான விவாதத்தில் மௌனத்தை கடைபிடிக்க தொழில்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அதிக அளவான நேர்மையான அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவும், அகதிகளுக்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்பதிலும், தொழில்கட்சி தீர்மானமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
           

No comments:

Post a Comment