Thursday, July 23, 2015

சிவில் உடையில் துப்பாக்கிகளுடன் வெள்ளை வான் சம்பவம்: குற்றப் புலனாய்வு பிரிவிற்கு!

Thursday, July 23, 2015
சிவில் உடையில் வெள்ளை வானில் கைத்துப்பாக்கிகளுடன் நடமாடிய மூன்று இராணுவத்தினர் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் தரப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று இராணுவத்தினரும் சிவில் உடையில் இருந்தமை மற்றும் அவர்கள் பயணித்த வெள்ளை வானின் இலக்கத்தகடு முரண்பாட்டிருந்தமை போன்ற காரணங்களினால் இந்த விடயத்தை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்துப்பாக்கிகளின் உரிமையாளர் என்று கூறப்படும் இராணுவ மேஜர் ஜெனரலான பிரசன்ன டி சில்வாவிடம், மிரிஹானை காவற்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட அவர்கள், தாங்கள் குறித்து மேஜல் ஜெனராலின் பாதுகாவளர்கள் என்றும், தாங்களிடம் காணப்படும் துப்பாக்கிகளும் அவருடையதே என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டால், இராணுவ சட்டத்தின் கீழ் தராதரம் பாராமல் தண்டிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர பாதுகாப்பு அமைச்சின் ஊடக கேந்திர நிலையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தெளிவுப் படுத்தினார்.

அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், மேஜர் ஜெனரால் பிரசன்ன டி சில்வாவினால் கடந்த 15 வருடங்களால் பாவிக்கப்பட்டு வந்தவை என்று அவர் குறிப்பிட்டார்.            

No comments:

Post a Comment