Sunday, July 26, 2015

ஹம்பாந்தொட்டை-தங்கால்லையில் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோக்தில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவர் பலி!

Sunday, July 26, 2015
ஹம்பாந்தொட்டை - தங்கால்லையில் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோக்தில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.

காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பல்லிகுடா உக்குவா என்ற பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொகவந்தலாவை லெட்சுமி தோட்டம் தொழிற்சாலை பிரிவில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் அந்த பகுதிக்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
           

No comments:

Post a Comment