Wednesday, July 22, 2015

மஹிந்த ராஜபச்;வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார்: கோட்டாபய ராஜபக்‌ஷ!

Wednesday, July 22, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபச்;வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
 
எனினும், ஜனநாயகத்தை சிறப்பாக ஏற்படுத்தியதனாலேயே மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்‌ஷ அவ்வாறு செய்திருக்காமல் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் அவரும் ஜனாதிபதியாக இன்று இருந்திருப்பார். தானும் இன்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்திருப்பேன் என்றும் கோட்டாபய கூறினார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உதய கம்மன்பிலவின் முதலாவது தேர்தல் பிரசார நடவடிக்கை பத்தரமுல்லையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கோட்டாபய இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எமது கைகளில் தவறுகள் இடம் பெற்றள்ளன. நாங்கள் இழைத்த தவறுகளை சரிசெய்துகொள்ள தயாராக இருக்கின்றோம். ஏனென்றால் தவறிழைப்போரை மஹிந்த ராஜபக்‌ஷ இப்போது சரியான முறையில் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
 
மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை சில ஊடகங்கள் தவறான முறையில் திரிபுபடுத்தி மக்களுக்கு காண்பித்திருந்தன. கொள்ளை அடிப்படையில் மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிப்பதற்கு முடியாத காரணத்தினால் அவர்கள், சர்வதேச ரீதியில் முயற்சி செய்து, கள்ளன் என்ற முத்திரையை பதிக்கச் செய்து, மக்களையும் நம்பவைத்து, மஹிந்தவை வீட்டிற்கு அனுப்பினர். கள்ளன், ஊழல், மோசடிக்காரர்கள் என்று தெரிவிக்கும் ரணில் விக்கிரமசிங்கவே உண்மையான கள்ளன் - என்றார் கோட்டாபய ராஜபக்‌ஷ..
 
தேசியப் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கு தேசியப் பாதுகாப்பு குறித்து கவனம்செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மெத்தனப்போக்கை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்த போது சிலர் தம்மை யுத்த விரும்பிகள் என அடையாளப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குறுகிய காலப்பகுதியில் நாட்டின் தேசியப் பாதுகாப்பு பாரியளவில் பாதிப்படைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சிலர் மஹிந்த ராஜபக்ஸவை சர்வாதிகாரி எனக் கூறியதாகவும் அவ்வாறு செய்திருந்தால், இன்றும் மஹிந்தவே நாட்டில் ஜனாதிபதியாக ஆட்சி செய்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் தொடர்ந்தும் நாட்டில் பாதுகாப்புச் செயலாளராக இருந்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார். தம்முடன் இருந்த சிலரின் நடவடிக்கைகளினால் தமது அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மஹிந்த ராஜபக்ஸ அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தவறுகளை திருத்திக்கொள்ளத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
 
சில ஊழல்பேர்வழிகளின் நடவடிக்கைளினால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
கடந்தகால பிழைகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பண்பான படித்தவர்கள் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஜனாதிபதியும் நானும் மிரிஹானவில் வசித்து வருகின்றோம். எமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
 
ஏன் சோபித தேரர் மௌனம் காத்து வருகின்றார், இதுதானா ஜனநாயகம், நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகின்றது.அண்மையில் ஐந்து புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு எமது குடும்பத்தை அச்சுறுத்தி வருகின்றது. இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment