Wednesday, July 22, 2015
2014ஆம் ஆண்டு நாம் பெற்றுக்கொண்ட கடனைவிட அதிகூடிய கடன் இந்த 100, 150 நாட்களில் பெறப்பட்டுள்ளது. வேலை செய்யவில்லை. ஆனால், பணமும் இல்லை. அப்படியாயின், வாங்கிய கடனுக்கு என்ன நடந்தது? எதற்காக செலவு செய்யப்பட்டது? என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவேண்டும். - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறியவை வருமாறு:- ஜனாதிபதி ஒருவரைத் தெரிவுசெய்யத்தான் நாட்டு மக்கள் அன்னத்திற்கு வாக்களித்தனர். மாறாக, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்க அல்ல. ஆனால், என்ன நடந்தது? ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டு 5 நிமிடங்கள் செல்லும் முன்னர் பதவிப்பிரமாணம் செய்து பிரதமர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டார். பிரதமர் அந்தப் பக்கம் இருக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. பதவி விலகுமாறு கடிதம்கூட அவருக்கு அனுப்பப்படவில்லை. அவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை தமது கைக்கு எடுத்தே இந்த 6 மாதங்களாக அவர் செயற்பட்டார்.
பழிவாங்குவதைத் தவிர, கொடுத்த ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றப்படவில்லை. வைபை கொடுத்தனர். ஆனால், கணினியை இயக்கி சுற்றி முற்றி பார்ப்பதற்கு முன்னர் இல்லாமல் போனது. 2014ஆம் ஆண்டு நாம் பெற்றுக்கொண்ட கடனைவிட அதிகூடிய கடன் இந்த 100, 150 நாட்களில் பெறப்பட்டுள்ளது. நான் கடன் வாங்கி வேலை செய்தேன். இவர்கள் ஆகக் குறைந்தது ஒரு வடிகானையாவது அமைத்தார்களா? எதுவும் செய்யவில்லை. பணமும் இல்லை. வாங்கிய கடனுக்கு என்ன நடந்தது? யார் கடன் வாங்கினார் என்பது தெரியும். எடுத்த பணம் எதற்காக செலவு செய்யப்பட்டது என்பதை பிரதமர் எமக்குக் கூறவேண்டும்.
இந்த நாட்டு இளைஞர்களைப் பற்றி சிந்தித்தவர்கள்தான் நாங்கள். இவர்கள் இளைஞர்களை நாசமாக்கத்தான் செயற்பட்டனர். இளைஞர்களை எவ்வாறு அடக்குவது. அதனால்தான் 60 ஆயிரம் கணக்கில் இளைஞர்களைக் காணாமல்போகச் செய்தனர். டயரில் எரித்தனர். அந்த வரலாறு எமக்கு இப்போது மறந்துள்ளது. அதனுடன் நின்றுவிடாது, அண்மையில், இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்களைத் தாக்கியது மட்டுமன்றி, சிறைக்கும் அனுப்பினர். நாளை என்ன செய்வர்? 100 நாட்களில் இதைச் செய்தார்கள் என்றால் நீண்ட காலம் வழங்கினால் என்ன செய்வார்கள்? நாடு நாசமாகிவிடும். என்ன நடக்கும் எனச் சிந்திக்கவேண்டும்.
இவர்கள் வழங்கிய காணி உறுதிப்பத்திரத்திற்கு என்ன நடந்தது? பாருங்கள். கவரை மட்டும் மாற்றி உறுதிப்பத்திரத்தை வழங்கினார். அதில் மஹிந்த ராஜபக்லிஷவின் கையயாப்பம் உள்ளது. நான் கையொப்பமிட்டு, பகிர்ந்தளிக்குமாறு கூற அவர்கள் பகிர்ந்தளிக்கவில்லை. இவர்கள் எனது கையொப்பத்தைப் பார்த்துள்ளனர்..
நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும் நிர்வாக முறையொன்றை செயற்படுத்த தாம்
அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
உறுதியளித்துள்ளார்.
மாத்தறை – கம்புறுப்பிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உணவு பழக்க வழக்கங்களில் உள்ள சம்பிரதாயங்களையும் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை கொண்டிருந்த மக்களுக்கு மாற்று உணவுப் பொருட்களை உண்ண பழக்கியுள்ளனர்.
கடந்த காலத்தில் மலிவாக இருந்த பல பொருட்கள் தற்போது உயர்ந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தறை – கம்புறுப்பிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உணவு பழக்க வழக்கங்களில் உள்ள சம்பிரதாயங்களையும் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை கொண்டிருந்த மக்களுக்கு மாற்று உணவுப் பொருட்களை உண்ண பழக்கியுள்ளனர்.
கடந்த காலத்தில் மலிவாக இருந்த பல பொருட்கள் தற்போது உயர்ந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.






No comments:
Post a Comment