Wednesday, July 22, 2015

சட்டவிரோதமான தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் கட்டுப்பாடு!

Wednesday, July 22, 2015
சட்டவிரோதமான பதாதைகள் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றுவற்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி, காவல்துறை பிரிவுகளில் சட்டவிரோத பிரசார அறிவித்தல்களை அகற்றுவது தொடர்பில் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் ஊடாக காவல்துறை தலைமையகத்திற்கு தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 74வது சரத்தின் அடிப்படையில் பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவிதத்திலும் சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் என்பவற்றை பயன்படுத்த கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
           

No comments:

Post a Comment