Wednesday, July 22, 2015
சென்னை:தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை முறியடிக்க அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை
குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை
கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் உளவு பிரிவு மற்றும் கியூபிரிவு
போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இருப்பினும்
அவ்வப்போது சிறுசிறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்க
முடியாததாகவே இருந்து வருகிறது. சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற ரெயில் குண்டு
வெடிப்பு சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இதேபோல அத்வானி
தமிழகத்துக்கு வருகை தந்த போது அவரை குண்டு வைத்து கொலை செய்ய சதி திட்டம்
தீட்டப்பட்டது. மதுரை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் இது
முறியடிக்கப்பட்டது. பைப் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில்,
ஐ.எஸ். தீவிரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவு பிரிவு
போலீசார் சமீபத்தில் எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இது
தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இது வழக்கமான
எச்சரிக்கை தகவல்தான். அவ்வப்போது இது போன்ற தகவல்களை மத்திய உளவு பிரிவு
அதிகாரிகள் அனுப்பி வைத்துக் கொண்டே இருப்பார்கள். இருப்பினும் இதனை
நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. தேவையான முன் எச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.
தமிழக போலீசாரால் பல ஆண்டுகளாக
தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், சித்திக்
ஆகியோர் கடந்த 2013–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் ஒரு வீட்டில்
பதுங்கி இருந்த போது போலீசாரால் சுற்றி விளைக்கப்பட்டனர்.
அப்போது
தீவிரவாதிகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதைத் தொடர்ந்து பன்னா
இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கி
பிடித்தனர். தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
தமிழக
போலீசார் மேற்கொண்ட இந்த ஆபரேசனின் போது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக
தலைமறைவாக இருந்து வரும் தீவிரவாதி அபுபக்கர் சித்திக் மயிரிழையில் தப்பிச்
சென்று விட்டான். போலீசுக்கு பெரும் சவாலாகவே இருந்து வரும் சித்திக்கை
பிடிக்க போலீசார் தொடர்ந்து பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.
ஆனால்
சித்திக் பிடிபடாமலேயே இருந்து வருகிறான். தலைமறைவாக இருந்தபடியே சித்திக்
இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த திட்டம்
தீட்டி வருவதாக போலீசார் தொடர்ந்து கூறி வந்த நிலையில், மத்திய அரசு
சார்பில் எச்சரிக்கை தகவலும் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து
சிறையில் இருந்து வெளியில் வந்த தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள்,
சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்
ஆகியோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய உளவு பிரிவு
அதிகாரிகள் எச்சரிக்கை தகவல்களை அனுப்பி வைத்துள்ளனர்.
1998–ம் ஆண்டு
கோவையில் தெடர்ச்சியாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்ற போதும்,
மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் இது போன்று எச்சரிக்கை தகவல்களை
விடுத்திருந்தனர். அதேபோல கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள்
தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்டன.
எனவே இதுபோன்ற எச்சரிக்கை தகல்களை அலட்சியப்படுத்தாமல் மாநில போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுடுத்தப்பட்டுள்ளது.
தற்போது
தீவிரவாத குழுக்களில் என்ஜினீயரிங் முடித்தவர்களும், தொழில் நுட்ப ரீதியாக
நிபுணத்துவம் பெற்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கம்ப்யூட்டர்
உதவியுடனும் பல நேரங்களில் சதி திட்டங்களை தீட்டுகின்றனர்.
எனவே சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடனும் தீவிரவாத செயல்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment