Sunday, July 26, 2015
இறுதியுத்த வரையினில்; புலிகளை அழிப்பதிலும் அதே போன்று
அவர்களை வேட்டையாடி முன்னின்ற புளொட் அiமைப்பின்
தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி
சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும்
அனந்தி இதனை செய்த சித்தார்த்தனிற்கும் அவரது ஆட்களிற்கும் குரல் கொடுப்பதே
அனந்தியினது ஆதரவாளர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
ஏற்கனவே அனந்தியினது
நடவடிக்கைகள் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பலரும்
விட்டுவிலகியுள்ளனர்.இந்நிலையினில் தற்போது எஞ்சிய ஆதரவாளர்களும் விட்டு
விலக முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே அனந்தியை தற்போது இயக்கிவரும் தரப்புக்கள் குறித்த முக்கிய புகைப்படங்களை வெளியிட ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது.
இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் இணைந்து அனந்தி விருப்பம் கொண்டிருந்த போதும் அவர்கள் பின்னடித்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment