Sunday, July 26, 2015

தனது விருப்பத்தின் படி தேர்தல் அமைப்பாளர்களை நியமிப்பது என தீர்மானித்துள்ள (குள்ளநரி) ஜனாதிபதி சிறிசேன இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது அரசியல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்!

Sunday, July 26, 2015
தனது விருப்பத்தின் படி தேர்தல் அமைப்பாளர்களை நியமிப்பது என தீர்மானித்துள்ள (குள்ளநரி) ஜனாதிபதி சிறிசேன இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது அரசியல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்

ஓரு வார காலத்திற்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 8ம் திகதி ஆணையை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமானவர்களிற்கு வாக்களிக்க வேண்டுமென  மக்களை கேட்டுக்கொண்டார்,
அது ஐக்கிய தேசிய கட்சி.யூலை 15 ம் திகதி நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை நிறுத்தினார்.அதற்கு மறுநாள் அவரை சந்திப்பதற்கு இருவர் வந்திருந்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைபின் பொதுச்செயலாளர் சுசில் பிரேஜயந்தவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பாவுமே அந்த இருவர், சிறிசேனா தேர்தல் தொகுதிகளிற்கு வேறு  அமைப்பாளர்களை தங்களிற்கு தெரிவிக்காமல் நியமிக்கிறார், ஊடகங்கள் ஊடாகவே தாங்கள் இதனை அறிவதாக அவர்கள் குறிப்பிட்டனர். சிறிசேன எதிர்காலத்தில்  தேசத்திற்கு உரையாற்றும் போது ஏற்கனவே தயாரித்துவைத்திருந்த உரையை பயன்படுத்த வேண்டும் என அனுரபிரியதர்சன யாப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிசேன தேசத்திற்கு ஆற்றிய உரையின் பின்னர் எதிர்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா அன்றிரவே ஜனாதிபதியை சந்தித்தார். அதன் பின்னர் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி தொடர்ந்தும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டால் கடுமையான நிலைப்பாடு எடுக்க நேரிடும் என நிமால் ஜனாதிபதிக்கு எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்கள் வெளியிட்ட கருத்திற்கு ஜனாதிபதி வெறும் புன்னகையை மாத்திரம் வழங்கியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
யாப்பா சிறிசேனவை கட்சியின் மத்திய குழு கூட்டத்தை கூட்டுமாறு  கோரியுள்ளார். சிறிசேன அதற்கு இணங்கியுள்ளார். இதனடிப்படையில் 30 திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கூட்டப்படவுள்ளது.

இதற்கிடையில் மாலைதீவின் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

தனது விருப்பத்தின் படி தேர்தல் அமைப்பாளர்களை நியமிப்பது என தீர்மானித்துள்ள ஜனாதிபதிசிறிசேன இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது அரசியல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் மகிந்தராஜபக்சவை தனிமைப்படுத்துவதே சிறிசேனவின் நோக்கம், அவரது இந்த முடிவு வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இறுதியாக சிறிசேன கெஸ்பாவ தேர்தல் தொகுதிக்கு மகிந்தராஜபக்ச ஆதரவாளர் ஓருவரை நியமித்தார். இந்த நியமனம் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும் அந்த தொகுதியின் அமைப்பாளருமான  முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேயை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ராஜபக்ச எதிர்ப்பாளர்கள் என கருதப்படும் வேறு சிலரும் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை தொகுதிக்கான அமைப்பாளராக  பதில் அமைப்பாளராக தனது விசுவாசியான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவை  சிறிசேன நியமித்துள்ளார். இது தீவிர ராஜபக்ச விசுவாசியான டலஸ் அலகபெருமவை ஆத்திரப்படுத்தி உயுள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்திற்கான இவ்வாறான நியமனம் ஓன்று சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அந்த நபர் ஓரு ஐ, ஆர் சி என பொலிஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதிஅமைப்பாளர்களாக உள்ள மகிந்த விசுவாசிகளை மெதுமெதுவாக நீக்குவதே (குள்ளநரி) சிறிசேனவின் திட்டம்,

No comments:

Post a Comment