Sunday, July 26, 2015

அம்மாறையில் சனிக்கிழமை(25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்! ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் நாட்டை விட்டு நான் ஒடவில்லை: மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, July 26, 2015
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் நாட்டை விட்டு நான் ஒடவில்லை, மீண்டும் என்னுடைய சொந்த இடத்துக்கே வந்தேன். அதை விட்டு பிரான்ஸுக்கோ இங்கிலாந்துக்கோ செல்லவில்லை.என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
அம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கூறினார்.
மேலும் அவர் தெரிவித்தாவது, 'நான் எப்போதும் உங்களை மறந்ததில்லை. பசில் ராஜபக்ஷ ஒரு அரசியல்வாதி என்பதால் அவர்  சிறைக்கு சென்றது பிரச்சினையில்லை, நிதிக் குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர் சிறைக்கு சென்றுள்ளார்.
 
ஆனால், அவர் மீது சுமத்தப்பட்ட  குற்றம் தொடர்பில் இன்னமும் விசாரணை நடத்தவில்லை. ராஜபக்ஷக்களை அழிக்க வேண்டும் , வெட்டவேண்டும் ,குழிதோண்டி புதைக்க வேண்டும் என் மேடைகளில் ரணில் பேசுகின்றார் . நாங்கள் செய்த குற்றம் தான் என்ன? நாட்டை யுத்ததில் இருந்து மீட்டதா? அல்லது நாட்டை  அபிவிருத்தி பாதையில் இட்டு  சென்றதா?' என்றார் .
 
நால்வருக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பினார் மஹிந்த!
 
வெளிவிவகார அமைச்சர மங்கள சமரவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, அனுர குமார திஸாநாயக்க மற்றும்  நாடோடிகளின் தலைவரான சுனில் பெரேரா ஆகியோருக்கு, கோரிக்கை கடிதங்களை,  குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ளார்.
 
இவர்கள் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று தெரிவித்தே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
 
நாட்டின் அபிவிருத்திக்கு 12 அம்ச வேலைத்திட்டம்'!
 
12 அம்ச வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
அம்மாறையில் சனிக்கிழமை(25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளர்.

No comments:

Post a Comment