Wednesday, June 10, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம்: பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

Wednesday, June 10, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு சதித்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஊடக நிலையம் என்ற புதிய அமைப்பே இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளது.
 
புலிகள் உறுப்பினர்களை  செய்ய முயற்சித்தல், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை, பிரதமர் வழமைக்கு மாறான விதத்தில் செயற்படுகின்றமை, அமெரிக்கா போன்ற புலிகளுக்கு சார்பான நாடுகளில் வசித்த அதிகாரிகளை மீள அழைத்தல், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த அக்கறையின்மை காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விசாரணையின் போது எழுத்து மூலஆதாரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
15 லட்சம் தொழில்வாய்ப்புகள் இழப்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
 
பல்வேறு துறைகளில் தொழில்வாய்ப்புகளில் ஈடுபட்டு வந்த 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது தொழில்களை இழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
பொலன்னறுவை – பக்கமுன பிரதேசத்தில் விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
 
அண்மைக்காலங்களில் அனைத்து விதமான அபிவிருத்தி செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
தாம் விகாரைகளுக்கு சென்று சமய நிகழ்வுகளில் ஈடுபடுகின்றமையால் சிலர் அச்சத்துடன் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
விகாரைகளின் வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என சில தரப்பினர் கூறியிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பொலன்னறுவை பிரதேச மக்களுக்கும் எனக்கு வாக்களித்தனர்.
ஆனால், வெற்றிபெற்ற தரப்பிற்கு நாங்கள் வாழ்த்து தெரிவித்தோம்.
 
பொலன்னறுவை பிரதேசத்தில் கட்டிடத்துறை சார்ந்து தொழில்களில் ஈடுபட்டு வந்த 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இன்று தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
 
மணல் அகழவில் ஈடுபட்ட சிறு தொழிலாளர்களும் இன்று வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment