Sunday, June 7, 2015

காணாமல் போனோரின் விசாரணை ஆணைக்குழுவினது அறிக்கை ஆகஸ்ட் 15ல்!

Sunday, June 07, 2015
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளம் ஜனாதிபதியின் ஆணைக்குழுவினது அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.

அது செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2013ம் ஆண்டு இந்த குழு உருவாக்கப்பட்டிருந்தது.

1990 ஆண்டு ஜுன் 10ம் திகதி முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் இந்த குழு விசாரணை நடத்திவந்துள்ளது.              
           

No comments:

Post a Comment