Monday, January 12, 2015
இலங்கை::புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று திங்கட்கிழமை முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம் பெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வர் என்று அவர்கள் மேலும் கூறினர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தது.
அத்துடன், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு வடக்கு, கிழக்கில் உள்ள மக்களிடம் கூட்டமைப்புக் கோரியிருந்தது. இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து 9 இலட்சத்து 78 ஆயிரத்து 111 வாக்குகள் (வடக்கில் - 3,94,991, கிழக்கில் - 5,83,120), கிடைக்கப் பெற்றன. அதன் மூலம் புதிய ஜனாதிபதியாக கடந்த வெள்ளிக்கிழமை, மைத்திரிபால சிறிசேன பதவியேற்றிருந்தார்.
புதிய ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. வாழ்த்துத் தெரிவித்திருந்தார். வெள்ளிக்கிழமை தனது பதவியேற்பு நிகழ்வில் பங்கெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மைத்திரிபால சிறிசேனா அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மற்றும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். இந்த நிலையில், புதிய அரசுடன் சந்திப்புக்கு வருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண அடிப்படையிலான அழைப்பை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். தேசிய அரசில் கூட்டமைப்பின் பங்களிப்பு தொடர்பிலும், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியில்


No comments:
Post a Comment