Monday, January 12, 2015
இலங்கை::உடனடியாகவே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கோரி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் சட்டத்தரணிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கை::உடனடியாகவே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கோரி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் சட்டத்தரணிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரியானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக சட்டவிரோதமான முறையில் குற்றப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டு அதன் ஊடாக அவர் பணி நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் சிரயானி பண்டாரநாயக்கவை மீளவும் பிரதம நீதியரசராக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் காரணமாக இன்றைய தினம் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உச்ச நீதிமன்றிற்கு கடமைகளுக்காக செல்ல மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலகுவது குறித்து இன்னமும் மொஹான் பீரிஸ் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment