Thursday, January 08, 2015
இலங்கை::ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது என்றும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை::ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது என்றும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
சுமார் 70 ஆயிரம் பொலிஸாரை தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக அழைக்கப்பட்டுள்ளதால் பொலிஸார் வழக்கமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பிரதேசங்களில் அவர்களுக்கு பதிலாக முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பாதுகாப்பு கடமைகளிலும் முப்படையினர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் முப்படையினரின் ஈடுபாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிடியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்றது. இது தொடர்பாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் விளக்கமளிக்கையில்,
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரை சார்ந்தது. எனவே நாடு முழுவதிலும் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கென சுமார் 70 ஆயிரம் பொலிஸார் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர்.இவர்களில் கலனிதிஸ்ஸ மின் விநியோகம், பிரதான பாலங்கள் போன்ற நாட்டின் முக்கிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸாரும் அடங்குவர்.
இந்நிலையிலேயே இவர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பகுதிகளுக்கு தேவைக்கமைய முப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கடமை முடிந்து பொலிஸார் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியவுடன் முப்படை யினர் மீள அழைக்கப்படுவர் என்றார். சுமார் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே இவ்வாறு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை தீவுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டுச் செல்லும் நோக்குடன் மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடல் வழியாகவும், ஹெலி மூலமும் வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்கு கடற்படை, விமானப் படையின் உதவிகள் கோரப்பட்டுள்ளன. எனவே சிவில் அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைய கடற்படையினரும் விமானப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
இது தவிர வேறு எக்காரணத்தைக் கொண்டும் பாதுகாப்பு படையினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றார்.இது தவிர சிவில் அதிகாரிகள் கோரும்பட்சத்தில் அவர்களுக்கு உதவி வழங்குவது என்பது பாதுகாப்பு படைவீரர்களின் பொறுப்புகளில் ஒன்றாகும். அந்த அடிப்படையில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினர் தேவைப்படும் பட்சத்தில் பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணையாளர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியிடம் கோரும்பட்சத்தில் பொலிஸாருக்கு உதவியாக பாதுகாப்பு படையினரை அனுப்புவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment