Thursday, January 8, 2015

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று!

Thursday, January 08, 2015
இலங்கை::வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகக் கூடு தலான வேட்பாளர்கள் போட்டியிடும் (19 பேர்) தேர்தல் இது வாகும். பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகிறது. பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். நள்ளிரவுக்குப் பின்பே தேர்தல் முடிவுகள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
தேர்தலை நீதி நேர்மையுடன் நடத்த வேண்டுமென்ற அர்ப்பணிப் பான செயற்பாட்டுடன் தேர்தல்கள் ஆணையாளர் செயற்படு கிறார் என்பதை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்புகளும் அறிவுறுத்தல் களும் அவருடைய உறுதியான பணிகளைப் படம் போட்டுக் காட்டு கின்றன. வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்தோடு சென்று வாக்களிக்குமாறு அவர் பொது மக்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
தேர்தல் என்பதும் வாக்களிப்பு என்பதும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனதாக இருந்து விடாதீர்கள். வாக்குரிமை என்பது நமது அடிப்படை உரிமை என்பதை மறந்து விடாதீர்கள். கடுமையான போராட்டங்களால் நாம் பெற்றுக் கொண்ட உரிமையை மறுதலிக்கும் வகையில் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது. இந்தத் தேர்தலில் நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகள் தான் ஜனநாயக விழுமியத்தின் அத்திபாரமாக அமையும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களது வாக்கை சரியாகப் பயன்படுத்த வேண்டியது அடிப்படை உரிமையுடன் சேர்ந்த கடமை என்பதை மறந்து விடார்கள்.
 
இந்த நாட்டினுடைய நிறைவேற்று அதிகாரமுள்ள 7 வது ஜனாதிபதி யைத் தெரிவு செய்யும் தேர்தல் இதுவாகும். பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல்களுடன் ஒப்பிடு கையில் ஜனாதிபதித் தேர்தல் என்பது முற்றிலும் மாறுபட்டதாகும். முழுநாடுமே ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆகவே, இந்த நாட்டினுடைய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதை நாம் மனிதில் கொண்டு செயற்படவேண்டியது கட்டாயமாகும்.
 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைதான் இப்போது நமது நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. தேர்தல் பிரசாரங் களில் இதனை ஒழிக்கப் போவதாக பேசப்பட்டது. அரசிய லமை ப்பை மாற்றித்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியு மெனவும் கூறப்பட்டது. இன்று நடைபெறும் தேர்தல் இதற்கு பதிலளிக்கும் விதமாக அமையும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. இலங்கையில் ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது 1972 என் றாலும், இது பெயரளவிலான ஒரு பதவியாக மாத்திரமே இருந்தது. திரு வில்லியம் கோபல்லாவ அப்போது ஜனாதிபதியாக இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும், ஒரு ஆளுநருக்குரிய அதிகாரங்களே அவருக்கு இருந்தது.
 
ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் 1978 ம் ஆண்டு கொண்டு வந்த புதிய அரசியலமைப்பின் கீழ் நிறை வேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப் பட்டது. இதன் மூலம், பிரதமர் பதவி வகித்த ஜே.ஆர். ஜய வர்தன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிப தியாக பதவியேற்றார். இதன் பின்பு 1982 ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும் ஜே.ஆர். ஜயவர்தன அமோக வெற்றி பெற்றார் என்பது நமது வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன.
 
இதன் பின்னர், 1988 ம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிரதமராக இருந்த ஆர். பிரேமதாசவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவியான திருமதி ஸ்ரீமாவோ பண் டார நாயக்க அம்மையாரும் போட்டியிட்டனர். ஆர். பிரேமதாச இதில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டியிருந்தார். மூன்றாவது தேர்தல் 1994 ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், காலம் சென்ற காமினி திசாநாயக்கவின் மனைவியான திருமதி ஸ்ரீமா திசாநாயக்கவும் போட்டியிட்டனர். என்றாலும் திருமதி சந்திரிகா வெற்றியீட்டினார். இதேபோல, 4 வது தேர்தல் 1999 ம் ஆண்டு நடத்தப்பட்டது. திருமதி சந்திரிகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட்டனர். இதில் சந்திரிகா மீண்டும் ஜனாதிபதியானார்.
 
5 வது தேர்தல் 2005ல் நடத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட்ட னர். இதில் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார். 6 வது தடவையும் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலமைப் புக்கமைய தனது 2 வது பதவிக் காலத்தில் 4 ஆண்டுகள் முடிவில் மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடு வதாக அறிவித்தார். அரசியலமைப்பின் 18 வது திருத்தம் இதற்கு வழிவகுக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவது இந்த 7 வது ஜனாதிபதித் தேர்தலின் சிறப்பாகும்.

No comments:

Post a Comment