Thursday, January 08, 2015
இலங்கை::அம்பாறை மாவட்டத்தில் 7 வது ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் அம்;பாறை ஹாடி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான நீல் டீ அல்விஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன் வாக்களிப்பு நிலைய தேர்தல் அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் உரிய நிலையங்களை சென்றடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 464 வாக்களிப்பு நிலையங்களில் நாளை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற இருக்கின்றது..
அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 வாக்காளர்கள் 184 வாக்களிப்பு நிலையங்களிலும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேர் 127 வாக்களிப்பு நிலையங்களிலும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேர் 87 வாக்களிப்பு நிலையங்களிலும் கல்முனை தேர்தல் தொகுதியில் 71,254 பேர் 66 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கவுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களில் ஏலவே தபால் மூலம் 22,286 பேர் வாக்களித்துள்ளனர்.
இதேசமயம் தேர்தல் வன்முறைகள், முறைகேடுகள் பற்றி அவதானிப்பதற்காக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக்கான பெப்ரல் அமைப்பு 280 உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment