Sunday, January 11, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வர தீர்மானம்!

Sunday, January 11, 2015      
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வர தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராஜினாமா செய்ய செய்து அந்த இடத்திற்கு மகிந்த ராஜபக்ஷவை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை இறுதி தீர்மானத்தை எடுக்க உள்ளது.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விடை பெறவில்லை என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மாலனி பொன்சேகா தனது பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்கு விட்டுக்கொடுத்துள்ளதாக தெரியவருகிறது!
 
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தின் போது மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என தெரியவருகிறது.
ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மாலனி பொன்சேகா தனது பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்கு விட்டுக்கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
 
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மாலனி பொன்சேகா, நாட்டுக்கு அரும்பணியாற்றிய தலைவருக்கு தனது நாடாளுமன்ற பதவியை வழங்க முடிந்தமை தான் செய்த பாக்கியம் என கூறியுள்ளார்.
 
மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ள மாலனி, சில காலத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகள் எல்லாம் மாறி ராஜபக்ஷ ஆட்சிக்காலம் ஒன்று ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment