Sunday, January 11, 2015

ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றி, புலிகளின் தமிழ்ஈழம் வரைபடத்துக்கு சமமானது: முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Sunday, January 11, 2015      
இலங்கை::ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றி, புலிகளின் தமிழ்ஈழம் வரைபடத்துக்கு சமமானது: முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல! ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றி, புலிகளின் தமிழ்ஈழம் வரைபடத்துக்கு சமமானது என்று முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவி;த்துள்ளார்.
 
கெஹலிய ரம்புக்வெல்ல இந்த கருத்தை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.இது குற்றச்சாட்டு இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், சிறுபான்மைக்கட்சிகள் முழுமையாக பிரிவினையை கோரி நிற்கின்றன.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் சமஸ்டியை வலியுறுத்தி வருகிறது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இதற்கு ஆதரவு வெளியிடுகிறார்.
 
இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் இருந்து 450, 000 வாக்குகள் மைத்திபாலவுக்கு கிடைத்துள்ளன.எனவே இது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல என்று கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment