Sunday, January 11, 2015
இலங்கை::ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், தேசியப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவித்தாரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை::ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், தேசியப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவித்தாரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக ஹெந்த வித்தாரணவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச நியமித்திருந்தார்.
இராணுவ ஆயுதப் பிரிவு புலனாய்வு அதிகாரியாக ஹெந்த வித்தாரண நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார்.
பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.
கடந்த 9ம் திகதி அலுவலகத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment