Thursday, January 15, 2015
நான் பிரதியமைச்சராக இருந்த காலத்தில் ஏதாவது இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதனை இத்தருணத்தில் நிரூபிக்குமாறு கோட்டுக்கொள்கின்றேன் இவ்வாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்
நேற்று காத்தான்குடி காரியாலயத்தில் தனது நிலை தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
முதலில் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவுக்கு வாக்களித்த மக்களுக்கு மன்மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் அத்துடன் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு நான் வெளியில் இருந்துகொண்டு முழு ஆதரவையும் வழங்க தயாராகவுள்ள அதேவேளை 100 நாள் வேலைத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளேன்.
அதாவது மிருகவதை தொடர்பான சட்டம் மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறையில் சிறுபாண்மையினருக்கு இழக்கப்படும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் போன்ற சட்டங்கள் வருகின்றபோது அதனை எதிர்க்க பின்வாங்கமாட்டேன்
அத்துடன் 135 பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள்தான் சட்டத்தின் பிரகாரம் ஆட்சியமைத்து பிரதமராக நிமல் சிரிபால டி சில்வாவை நியமிக்க முடியும் எனினும்; மக்களின் ஆணையை மதித்து மக்கள் வழங்கிய ஐனநாயகத்தின் அடிப்படையிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள நன்மை பயக்கும் விடயங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையிலும் எவ்வாறு செயற்படுத்தப்போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருக்கிறோம்
என்னைப்பற்றி பொறியியலாளர் அப்துல் றகுமான் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் முன்னாள் ;மாகாண சபை உறுப்பினர் முபீன் போன்றோர் நான் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பேசி வருகின்றனர். முடிந்தால் நான் ஏதேனும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள தொலைபேசிக்கு தெரிவித்து நிரூபிக்குமாறு வினயமுடன் கேட்டுக்கொள்கின்றேன்
எமது பகுதியில் காணப்பட்ட எனது படம் பொருந்திய கட்டவுட்களை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். அது தொடர்பான வீடியோ என்னிடம் உள்ளது அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
நான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தீர்மானத்தின்படி செயற்படும் அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பான யு பி எப் ஏ கூட்டங்களுக்கு நானே செல்கின்றேன் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment