Thursday, January 15, 2015
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியை பதவியிலிருந்து நீக்கக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேட்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கிணங்கவே ஜி.ஏ. சந்திரசிறி வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அகவே அரசாங்கம் அவரை பதவியிலிருந்து நீக்கக்கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கிணங்கவே ஜி.ஏ. சந்திரசிறி வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அகவே அரசாங்கம் அவரை பதவியிலிருந்து நீக்கக்கூடாது.
மேலும் நீதி அரசர் மொஹான் பீரிஸை நீக்குவது மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் கட்சி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment