Thursday, January 15, 2015
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, தேசிய பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது. சரத் பொன்சேகா இழந்த இராணுவ பதவிகள், பட்டங்கள், பதக்கங்கள் அனைத்தையுமே மீளவும் வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒத்துழைப்பு வழங்க சரத் பொன்சேகா இணங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்காத காரணத்தினால் சரத் பொன்சேகா அமைச்சராக நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது. பாதுகாப்பு செயலாளர் பதவி அண்மையில் நிரப்பப்பட்டிருந்தது.

இதன்படி, தேசிய பாதுகாப்பு குறித்த ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியே தற்போதைக்கு சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு நியமிக்கப்பட்டு அதன் பின்னரே சரத் பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியும். எனினும், அதற்கான வாய்ப்புக்கள் தற்போதைக்கு உண்டா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment