Tuesday, January 13, 2015

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஸ கொழும்பில்!

Tuesday, January 13, 2015      
இலங்கை::இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஸ கொழும்பில்… தனது இல்லத்திலேயே தங்கியிருப்பதாக கொழும்பின் முக்கிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது…
 
பசில் ராஜபக்ஸவும் அவரது மனைவியும் மட்டுமே அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றதாகவும் அண்ணனை தனித்து விட்டு போக விரும்பாத அவர் வருவதை எதிர்கொள்ள தாயாரன நிலையில் இருப்பதோடு ஆயளும் புதிய அரசாங்கத்திற்கு அண்ணன் மகிந்தவுடன் இணைந்து தலையிடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது…
 
இலங்கையின் புலிகளுக்கு எதிரான யுத்த வீரர்களாக வர்ணிக்கப்படும் கோத்தாபய மற்றும் மகிந்த சகோதரர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் எடுக்க முடியாது என்பது  தெரியும்.
 
ஆடசியை இறுகத் தக்கவைக்காமல் யுத்த வீரர்களுக்கு எதிராக இறங்கினால் சிங்கள மக்களின் கடுமையான நெருக்குதல்களை புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதனை மைத்திரி றணில் தரப்பினர் நன்கு உணர்ந்துள்ளதுள்ளனர்.
 
இந்த நிலையில் இன்னும் அதிகளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களும், 42 வரையிலான கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் தம்வசம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான சூழலில் கோத்தாபய ராஜபக்ஸ கொழும்பிலேயே தொடர்ந்தும் தங்கி அண்ணன் மகிந்த ராஜபக்ஸவுக்கு பக்க பலமாக இருப்பதாக முக்கிய அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment