Tuesday, January 13, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே சுதந்திர கட்சியின் தலைவர் : தேர்தல்கள் ஆணையாளருக்கும் அறிவிப்பு!

Tuesday, January 13, 2015      
இலங்கை::ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நீடிப்பதற்கு கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மேல் மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவினை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அநுர பிரியதர்ஷன யாப்பா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்தும் கூறுகையில்:-
 
எமது மத்திய குழு நேற்று முன்தினம் கூடியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் நீடிப்பதற்கு ஏகமனதாக அனுமதி வழங்கியது.இது தொடர்பான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் நாம் தெரிவித்துள்ளோம்.
 
அதனடிப்படையில் எங்கள் எல்லோருடனுமான உதவியுடன் நேற்று எமது கட்சியின் நிறைவேற்றுக் குழு கூடியது. இந்த கூட்டத்தில், நேற்று முன்தினம் எமது மத்திய குழு கூடி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் நீடிப்பதற்கு வழங்கிய அனுமதியை உறுதிப்படுத்தியதுடன் நிறைவேற்றுக் குழுவும் ஏகமனதாக அனுமதியை வழங்கி நிறைவேற்றியது என்றார்.

No comments:

Post a Comment