Tuesday, January 13, 2015

தற்போது புதிய அரசாங்கத்தில் பெரும்பான்மை பிரச்சினை!

Tuesday, January 13, 2015      
இலங்கை::புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலர் ஆதரவளிக்க முன்வந்தமை காரணமாக தற்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தளம்பல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலம் வீழ்ச்சியடைந்துள்ளது.

சபாநாயகருடன் 225 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 112 பேரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் 112 பேரும் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக தெரிவு செய்யபட்ட தருணத்தில், எம்.கே.டி.எஸ்.குணவர்தன, ராஜித்த சேனாரத்ன, துமிந்த திசாநாயக்க, ரஜீவ விஜேசிங்க மற்றும் சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.

பின்னர், முதலாவதாக முன்னைய அரசாங்கத்திலிருந்து விலகிய ஹெலஉறுமயவின் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தனர்.

பின்னர் வசந்த சேனநாயக்க, நவின் திசாநாயக்க ஆகியோர் முன்னைய அரசாங்கத்தில் இருந்து விலகிய நிலையில் ரிஷாட் பதியுதீன், அமிர் அலி, உனைஸ் பாருக், பீ. ராஜதுரை, பீ. திகாம்பரம், வி.ராதாகிருஷ்ணன்,அச்சல ஜாகொட மற்றும் நந்திமித்திர ஏக்கநாயக்க ஆகியோர் பொது எதிரணியில் இணைந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் சரத் அமுனுகம, ஜனக்க பண்டார தென்னக்கோன். பியசேன கமகே, எஸ்.பி. நாவின்ன, ரெஜினோல்ட் குரே, விஜித் விஜயமுனி சொய்சா, ஜயத் புஷ்பகுமார, நில்வலா விஜயசிங்க, அத்தாவுட செனீவரட்ன, மனுஷ நாணயகார ஆகியோர் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர்.

இன்றைய தினம் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ பணிகளை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பித்தபோது, மில்ரோய் பர்ணாண்டோ, அப்துல் காதர், தயாசிரித திசேரா, பீலிக்ஸ் பெரேரா, லலித் திசாநாயக்க, நியமோல் பெரேரா, அருந்திக்க பர்ணாண்டோ உள்ளிட்ட முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து கொண்டனர்.

பிந்திக் கிடைத்த தகவலின்படி, மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன்; தொண்டமானின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இது தவிர, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, திஸ்ச வித்தாரண உள்ளிட்ட இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் ஜனாதிபதியின் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

மேலும் ஒரு உறுப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினால் அவருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment