Tuesday, January 13, 2015

கொல்லம் அருகே பரபரப்பு : இந்தியா கடலோர படை துப்பாக்கி சூடு : 2 குமரி மீனவர்கள் படுகாயம்

Tuesday, January 13, 2015   
திருவனந்தபுரம்::கேரளம் மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஜாஸ்மின் ஷா என்பவருக்கு சொந்தமான ரிஷிகா என்ற படகில் குளச்சலை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 10  நாட்களுக்கு முன் மீன் பிடிக்க கொல்லம் நீண்ட கரையில் இருந்து கன்னியாகுமரி பகுதிக்கு சென்றனர். மீன் பிடித்துவிட்டு நேற்று படகு கொல்லத்திற்கு திரும்பியது.  மாலை 4 மணியளவில் விழிஞ்ஞம் அருகே கடல் பகுதியில் படகு சென்றது.அப்போது கடலில் ரோந்து பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினர்.

 சந்தேகத்தின் பேரில் படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் படகு நிற்காததால் எச்சரிக்கை நடவடிக்கையாக படகு மீது கடலோர பாதுகாப்பு படையினர்  துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் படகில் இருந்த குளச்சல் பகுதியை சேர்ந்த சுபின் ஜெகதீஸ்குமார் (30), கிளின்டன் (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர்  படகை விழிஞத்திற்கு கொண்டு சென்று படுகாயமடைந்த இருவரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தங்களை நோக்கி 10 ரவுண்ட் சுட்டதாக மீனவர்கள் கூறி உள்ளனர்.

கடலோர பாதுகாப்பு படையினர் கூறுகையில், குஜராத் அருகே பாகிஸ்தான் படகு ஆயுதங்களுடன் வந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பகுதிகளை  தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நேற்று மாலை விழிஞ்ஞம் அருகே வந்த  ஒரு மீன்பிடி படகை நிறுத்துமாறு கூறினர். ஆனால் நிறுத்தவில்லை. மூன்று முறை கூறியும் நிறுத்தாததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. அப்படியும்  படகு நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் கட்டாயம் ஏற்பட்டது‘ என்றனர்.

No comments:

Post a Comment