Thursday, January 8, 2015

தேர்தல் நீதியான முறையில் நடைப்பெற ஏற்பாடுகள்: அரசாங்கம் உறுதி!

Thursday, January 08, 2015
இலங்கை::பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், தேர்தல் ஆணையாளர் நியாயமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பார் என உறுதியளிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் அனுரபிரிய தர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்
 
சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்தனர்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பாவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலுக்கான ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதி தம்சோ மெபுவால் உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment