Friday, January 16, 2015
இலங்கை::வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுரகங்களில் அரசியல்ரீதியில் நியமனங்களை பெற்ற அனைவரையும் ஒரு வார காலத்திற்குள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் புதிய தூதுவர் பதவியேற்றதும், உடனடியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்,அரசியல் ரீதியில் நியமனம் பெற்ற தூதுவர்கள் அனைவரும் உடனடியா மீள அழைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு அரசியல்நியமனங்களை பெற்றுள்ளவர்களை மீள அழைக்கும் பணியை முன்னெடுக்கும் போது,தூதரகங்களின் பணிகள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதனை முன்னெடுப்போம்,
வெளிநாடுகளுக்கான தூதரகங்களுக்கு எதிர்காலத்தில் நியமனங்களை மேற்கொள்ளும்போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் பின்பற்றிய முறையை நாங்களும் பின்பற்றுவோம், 70 வீதமான தூதுவர்கள் வெளிவிவகாரசேவைக்குள்ளலிருந்து தெரிவுசெய்யப்படுவார்கள்.
30 வீதமானவர்கள் அரசியல் ரீதியிலான
நியமனத்தை பெறுவார்கள், அரசியல் ரீதீயில் நியமனம் வழங்கப்படும்போது கூட
தகுதி, திறமை என்பவற்றை வைத்தே அதனை வழங்குவோம், விசுவாசத்திற்கு இடமில்லை
என அவர்தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment