Friday, January 16, 2015
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உடனடியாக ஆட்சியை விட்டுக் கொடுத்தமை பாரிய தவறாகும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உடனடியாக ஆட்சியை விட்டுக் கொடுத்தமை பாரிய தவறாகும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது எனவும், இது அரசியல் ரீதியான தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏனைய கூட்டணி கட்சிகளுடன் எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டு மிக அவசர அவசரமாக பிரதமர் ஒருவரை நியமித்தமை வழமைக்கு மாறானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தங்களுக்காக வாக்களித்த பெரும் எண்ணிக்கையிலான கட்சி அதரவாளர்களை உதாசீனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விட்டுக் கொடுத்த விதம் தவறானது என அவர் விமர்சனம் செய்துள்ளளார்.
5.7 மில்லியன் மக்கள் நம்பிக்கை வைத்து மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், தலைமைத்துவத்தை ஒப்படைத்து மைத்திரிபாலவிடம் சரணடைந்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் என்ற கோட்பாட்டை இடதுசாரி கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment