Thursday, January 08, 2015
இலங்கை::இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ இன்று (08) நாடு முழுவதும் நடாத்தப்படவுள்ளது.
இலங்கை::இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ இன்று (08) நாடு முழுவதும் நடாத்தப்படவுள்ளது.
வாக்களிப்பு காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்காளர்கள் இயலுமானவரை காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்கு மாறும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டார்.
வாக்காளர்கள் தமது அடையாளத்ததை உறுதிப்படுத்த கீழ்வரும் ஆவணங்களை கொண்டு செல்லலாம்.
* தேசிய அடையாள அட்டை
* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
* செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
* ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டை
* முதியோர் அடையாள அட்டை
* மதகுருமார் அடையாள அட்டை
*தேர்தல் திணைக்களத்தினால் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை

தேர்தலில் வாக்களிப்பது உங்கள் உரிமை என்பதனால் அந்த உரிமையை எக்காரணம் கொண்டும் தவறவிட வேண்டாமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment