Thursday, January 8, 2015

மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களின் மேன் முறையீடு தள்ளுபடி!

Thursday, January 08, 2015
இலங்கை::ஜனாதிபதி மக்கள் தொடர்பு அல்லது அதற்குச் சமமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு கடுவெல மாவட்ட நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்குமாறு சுயாதீன தொலைக்காட்சி, ரூபவாஹினி மற்றும் சுவர்ணவாஹினி  ஆகிய தொலைக்காட்சி சேவைகள் இணைந்து நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் முன்வைத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி பொது அபேட்சகர் மைத்திரிபால சிரிசேனவின் சட்டத்தரணி கடுவெல நீதிமன்றத்தில் இந்த தடை உத்தரவைப் பெற்றிருந்தார்.
 
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment