Thursday, January 22, 2015

இலங்கை சிறையிலிருந்து விடுதலை 15 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்!

Thursday, January 22, 2015
நாகை::இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து யாழ்ப்பாணம் சிறையிலிருந்த காரைக்கால் மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 15 மீனவர்களும் நேற்று மதியம் 11.30 மணியளவில் இந்திய எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான விஸ்வா கப்பலில் 15 மீனவர்களும் புதுவை மாநிலம் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு நேற்றிரவு அழைத்து வரப்பட்டனர்.
 
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 87 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே இந்திய மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். படகுகள் விரைவில் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment