Thursday, January 22, 2015

தேர்தல் நடைபெற்ற தினமன்று பின் இரவில் இராணுவ சூழ்ச்சித் திட்டம் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை: உதய கம்மன்பில!

Thursday, January 22, 2015
இலங்கை::தேர்தல் நடைபெற்ற தினமன்று பின் இரவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இராணுவ சூழ்ச்சித் திட்டம் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது இராணுவ சூழ்ச்சித் திட்டத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியில் நீடிக்க முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
கம்பஹா வாக்கு எண்ணும் நிலையத்தில் மேல் மாகாணசபை ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் சமன்மலி சகலசூரியவை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டனர்.
 
இது குறித்து மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் தோல்வியடைந்து விட்டோம் என்பதனை 3 மணியளவில் அறிந்து கொண்டோம்.  கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு அவர்களின் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் விளைவிக்கப்படக் கூடுமென நாம் அஞ்சினோம்.
 
இவ்வாறு குழப்பம் விளைவிக்கபபட்டால் அது பாப்பரசரின் இலங்கை விஜயத்தை பாதிக்கும்.  எனவே, ஊரடங்கு சட்டமொன்றை அமுல்படுத்தி அமைதியை நிலைநாட்டுவது குறித்தே பேசப்பட்டது. இராணுவ சூழுச்சித் திட்டம் பற்றி பேசப்படவில்லை.
 
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் கப்ரால், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிர் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்தக் கலந்துரையாடல்களில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பங்கேற்றாரா என்பது எனக்கு நினைவில்லை என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்கு மூலமொன்றை அளித்து திரும்பியதன் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை கம்மன்பில தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment