Saturday, January 10, 2015
சென்னை::ஆர்.எஸ்.மங்கலம்:இலங்கைக்கு கடத்த
மதுரையில் இருந்து காரில் கொண்டு வந்த 140 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம்,
தேவிபட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக
கிடைத்த தகவல்படி,
ராமநாதபுரம் 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி
தலைமையில் போலீசார் நேற்று காலை 11 மணிக்கு தேவிபட்டினம் கடற்கரையில் சோதனை
நடத்தினர். அங்கு கண்ணா முனை பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒரு காரில்
இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில்,
அவர்கள் மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார், 33, முருகேசன், 46,
அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமநாதன், 40, ஆகியோர் எனவும், கஞ்சா மூடைகளை
காரில் கொண்டு வந்து இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது.
இதன் சர்வதேச
மதிப்பு ரூ.70 லட்சம். அவர்களிடம் இருந்து தலா 20 கிலோ வீதம் 7 பண்டல் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து , 3 பேரையும் கைது செய்தனர்.கடந்த மாதத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 745 கிலோ கஞ்சா மூடைகளை 'கியூ' பிரிவு போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் பறிமுதல் செய்தது குறிப்பிடத் தக்கது.

No comments:
Post a Comment