Saturday, January 10, 2015

பிரிவினை வாதத்தை ஆதரிக்கும் சந்தர்பவாதம்??

Saturday, January 10, 2015
இலங்கை அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக் ஷேவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்குமிடையில் கடும் போட்டி நிலவி வந்தது. இரு தரப்பு தேர்தல் பிரசாரங்களின் போது, வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. மக்கள் தம் தீர்ப்பை அளித்துள்ளனர்; வெற்றியோ, தோல்வியோ, சம்பந்தப்பட்ட தரப்புகள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய முடிவாயினும் ஏற்றுக் கொண்டு, நாட்டின் எதிர்காலத்தை சுபிட்சமாக்க, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே, தற்போதைய தேவையாக உள்ளது.

ஆனாலும், சுமுகமான முறையில் வாக்களிப்பு இடம் பெற்று, முடிவுகளும் வெளியாகியுள்ளன. ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில், மக்கள் தம் தலைவரை தெரிவு செய்வதற்கு வாக்களித்துள்ளனர். அந்த மக்களின் தீர்ப்பை ஏற்று, நாட்டின் எதிர்காலத்தை சுபிட்சமாக்கும் வகையில், செயற்பாடுகளை ஆரம்பிப்பதே இன்றைய தேவையாக உள்ளது.நாட்டில், 1982 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான தேர்தல் முதன் முதலில் இடம் பெற்றது. அதில் ஜே.ஆர். ஜயவர்த்தனேவுடன், எச்.எஸ்.ஆர்.பி.கொப்பேகடுவ போட்டியிட்டிருந்தார். இந்தத் தேர்தலில், ஜே.ஆர். ஜயவர்த்தனே வெற்றி பெற்று, ஜனாதிபதியானார்.
போட்டி நிலவியது:
 
இதேபோல், 1988ம் ஆண்டு, ரணசிங்க பிரேமதாஸாவிற்கும், சிறிமாவோ பண்டார நாயக்கவிற்குமிடையில் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில், ரணசிங்க பிரேமதாஸா ஜனாதிபதியானார்.பின், 1994ம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றது. இந்தத் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்காவிற்கும், சிறிமதி திஸாநாயக்கவுக்குமிடையில் போட்டி நிலவியது; இதில் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியானார். கடந்த, 1999ம் ஆண்டு இடம் பெற்ற, நான்காவது தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்காவும், ரணில் விக்கிரமசிங்கேவும் போட்டியிட்டிருந்தனர்; இதில், மீண்டும் சந்திரிக்கா குமாரதுங்கா ஜனாதிபதியானார்.
 
தொடர்ந்து, 2005ம் ஆண்டு மகிந்த ராஜபக் ஷேவும், ரணில்விக்கிரமசிங்கேவும் போட்டியிட்டிருந்தனர்; இந்தத் தேர்தலில், மகிந்த ராஜபக் ஷேஜனாதிபதியானார்.கடந்த, 2010 ஆம் ஆண்டு, ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றது. இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக் ஷேவுக்கு எதிராக, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். பொது எதிரணி வேட்பாளராகவே சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவுகளு டன் போட்டியிட்டிருந்தார். ஆனாலும், 18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், மீண்டும் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக் ஷே பதவியேற்றார்.

இவ்வாறு, இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியான மகிந்தராஜபக் ஷே, தற்போது மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இவர், 2011ம் ஆண்டு அரசியல் அமைப்பின், 17வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்து, 18வது திருத்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஒருவர், எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலையை உருவாக்கினார். இதை வைத்து, மூன்றாவது பதவிக் காலத்திற்காக ஜனாதிபதி மகிந்தராஜபக் ஷே, இம்முறை, தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எதிரணியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான, ரணில் விக்கிரமசிங்கேவே போட்டியிடுவார் என்று ஆரம்பத்தில் எதிர்வு கூறப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், எதிரணியினர் ஒன்றிணைந்து, பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக கலந்தாலோசனைகளும் இடம் பெற்று வந்தன.

இவ்வாறான நிலையில், கடந்த நவ., 20ம் தேதி, ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமாணி அறிவித்தல், ஜனாதிபதியால் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, டிச., 8ம் தேதி, வேட்பு மனு தாக்கல் இடம் பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய பின், இலங்கை சுதந்திர கட்சியின் செயலரும், சுகாதார அமைச்சருமாக பதவி வகித்த மைத்ரிபால சிறிசேன, எதிரணிக்கு மாறியதையடுத்து, அவர் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டார். 
 
இதையடுத்து, அரசு தரப்பிலிருந்து, 26 எம்.பி.,க்கள் வரையில் எதிரணிக்கு மாறியிருந்தனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் அங்கம் வகித்த, ஜாதிக ஹெலஉறுமய, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், அரசாங்கத்திலிருந்து வெளியேறி, எதிரணியுடன் இணைந்திருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், எதிரணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கியிருந்தது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பல கட்சிகள், எதிரணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதையடுத்து, தேர்தலில் கடும் போட்டி நிலவியது.
 
மாற்றத்தை ஏற்படுத்தி விடாது:
 
மைத்ரி பால வெற்றி பெற்றது, இலங்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. புலிகளுக்கு ஆதரவாக  பிரிவினை வாதத்தை ஆதரிக்கும்   தமிழர்களின் கோபமும், சந்தர்பவாத முஸ்லிம்களின் அவருக்கு எதிராக ஓட்டளிக்க வைத்தன. மற்றபடி, சிங்களர்கள் பெரும்பான்மையாக அவருக்கு ஓட்டளித்து உள்ளனர்.மேலும், அவருடைய சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர் தான், மைத்ரி பால என்பதால், ராஜபக் ஷேவுக்கு எதிரான செயலில், அவர் என்றுமே ஈடுபட மாட்டார். அப்படி ஈடுபட்டு விட்டால், பார்லிமென்ட்டில், அவர் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் காலம் வரும்போது, அவருக்கு எதிராக ஓட்டு விழுந்து விடும்.

No comments:

Post a Comment