Saturday, January 10, 2015
ராமநாதபுரம்::தேவிபட்டினம் அருகே கியூ பிரிவு போலீசார் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே முத்துரெகுநாதபுரம் கண்ணாமுனை கடற்கரையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமை யிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை, நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் 140 கிலோ கஞ்சா, பொட்டலங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.70 லட்சம்.கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த காரில் வந்த மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் (33), அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (46), மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமநாதன் (40) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மதுரையிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment