Wednesday, January 21, 2015
சென்னை::லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் 'லிங்கா' படத்தை வேண்டுமென்றே, திட்டமிட்டு சதி செய்து தோல்வியடையச் செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
ரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி என்று லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "லிங்கா படம் உண்மையில் நல்ல திரைக்கதையை வைத்து எடுக்கப்பட்ட படம்.
ஆனால் திருச்சி – தஞ்சை விநியோகஸ்தர் சிங்கார வேலன், ஒரு வினியோகஸ்தராக இருந்து கொண்டு 'லிங்கா' பற்றி தவறான கருத்துக்களைச் சொல்லி படத்தைக் கெடுத்து விட்டார்.
என்னைப் பொருத்தவரை இது ரஜினி சாரின் பெயரையும் செல்வாக்கையும் கெடுக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. அவர் அரசியலுக்குள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், செய்யப்பட்ட இந்த சதியில் சிங்கார வேலனுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் தேர்தல் வரப் போகிறது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் அடுத்து ரஜினி சாருக்கு அரசியல் வாய்ப்பு குறைவு. அவருக்கு இப்போது வயது 64.
ரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி. எந்தக் கட்சி என்பது முக்கியமில்லை. மக்களுக்கு உழைப்பதுதான் ரஜினியின் குறிக்கோள்.
தமிழகத்தைப் பற்றி அவருக்கு ஒரு பார்வை உள்ளது. அவர் மிகச் சுத்தமானவர். தெய்வ பக்தி மிக்கவர். அவரது பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.
அவர் அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

http://www.worldcup2015livenews.com/
ReplyDeletehttp://www.valentinesday2015giftideas.com/
http://www.republicday2015speech.com/