Thursday, January 22, 2015
இலங்கை::அரசியல் நல்லிணக்கம் மற்றும் பங்கேற்பு தொடர்பில்
இலங்கையின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள ஆரம்ப நடவடிக்கைகளை இந்தியா நேற்று
பாராட்டியுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றிகரமாக நிறைவு
பெற்றுள்ளமையையிட்டு இந்திய பிரதமர் ரரேந்திரமோடி இலங்கை மக்களுக்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்ககையில் நடைபெற்ற இத்தேர்தல் பாரிய
பிராந்திய மற்றும் சர்வதேச நலன்களுடன் அவதானிக்கப்பட்டுவந்ததாக அவர்
தெரிவித்துள்ளார்.
நேற்று புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
அவர்களைச் சந்தித்தபோதே பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.
தேர்தலில் பெற்ற அமோக வெற்றிக்காக புதிய ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இந்திய
பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது இலங்கையில் ஐக்கியத்திற்கும்
மாற்றத்திற்கும் அளிக்கப்பட்ட வாக்கு என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றி இலங்கையில்
சமாதானம்இ நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கும் பிராந்தியத்தில் சமாதானம்
மற்றும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் அவர்
தெரிவித்;தார். இலங்கையை ஒரு மிக நெருங்கிய உண்மையான அயல் நாடாகவும் நற்பு
நாடாகவும் வர்ணித்த பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும்
அவர்களது அபிலாஷைகளை அடைந்து கொள்வதில் இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை
வழங்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை
ஏற்றுக்கொண்டமைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு நன்றிகளைத்
தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி ஜனாதிபதி சிறிசேனவை மிகவிரைவில் வரவேற்க
எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு
விடுக்கப்பட்ட அழைப்பையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

No comments:
Post a Comment