Thursday, January 8, 2015

1ம்-இணைப்பு:- நாடு முழுவதும் 60 வீதமான வாக்குகளே அளிக்கபட்டன: சிறு சிறு அசம்பாவிதங்களோடு வாக்களிப்பு நிறைவடைந்து!

Thursday, January 08, 2015
இலங்கை::இலங்கைகாலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது. சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம் முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
 
யாழ் மாவட்டத்தில் 59 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும், மாத்தளையில் 72 வீதமான வாக்குப் பதிவுகளும் கேகாலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், பதுளையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றன.
 
முல்லைத்தீவில் 68 வீதமன வாக்குப் பதிவுகளும், அம்பாறையில் 70 வீதமான வாக்குகளும், திருகோணமலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், மொனராகலையில் 65, மாத்தறையில் 73 வீதமான வாக்குப் பதிவுகளும், அம்பாந்தோட்டையில் 70 வீதமன வக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளது.......
 
இன்றைய தேர்தலில் மாலை 3,45வரை 60 வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதிலும் வடக்கில் தமிழர்களின் வாக்கு  50% மட்டகளப்பில் 51% அம்பாறை 57%  திருகோணமலை 57 வீதமே அளிக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கண்டி 65% பொலநறுவை 50% மாத்தளை 62% பதுளை 60% மக்கள் வாக்களித்துள்ளனர் பொதுவாக இலங்கை முழுவதும் 60% மான வாக்குகளே பதிவாகியுள்ளன, வவுனியா மற்றும் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் மைதானத்தில் கைக்குண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது அத்துடன் கொடிகாமம் கச்சாய் பகுதியிலும் குண்டொன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.........
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதி தேர்தல் இன்றைய தினம் நடைபெற்றது.
 
சுமார் ஒன்றரை கோடி வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுக்கொண்டிருந்தனர்.
நாடு முழுவதிலும் இன்றைய தினம் சீரான காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு பகுதியிலும் மிகவும் மோசமான காலநிலை நிலவவில்லை.
12314 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்திருந்தனர்.
நாட்டின் பல பாகங்களிலும் அதிகளவான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சராசரியாக 65 வீதத்திற்கும் அதிகமானர்கள் வாக்களித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சில மாவட்டங்களில் 70 வீதம் வரையிலானவர்கள் வாக்களித்துள்ளனர்.
தற்போது வாக்கு பெட்டிகள் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment