Thursday, January 8, 2015

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் (04.00 மணி) நிறைவடைந்துள்ளன!

Thursday, January 08, 2015
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் (04.00 மணி) நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியது.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
 
-----------------------------------------------------------------------------------------------
 
கிழக்கில் பிற்பகல் 2 மணிவரை பதிவான ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு வீதம் வருமாறு:- அம்பாறை 57.7% மட்டக்களப்பு 51% திருகோணமலை 57%
 
------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதித் தேர்தலுக்கான இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!
 
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 04.00 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.

இதன்படி இன்று காலை 07.00 மணி தொடக்கம் பிற்பகல் 02.30 வரையான காலப்பகுதியில் களுத்துறையில் 55 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 67 சதவீத வாக்குகளும், நுவரெலியாவில் 70 சதவீத வாக்குகளும், மாத்தறையில் 60 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 57 சதவீத வாக்குகளும், பொலன்னறுவையில் 59 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 50 சதவீத வாக்குகளும், கேகாலையில் 60 சதவீத வாக்குகளும், கம்பஹாவில் 50 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 51 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 60 சதவீத வாக்குகளும், மன்னாரில் 55 சதவீத வாக்குகளும், அம்பாறையில் 57.5 சதவீத வாக்குகளும், பதுளையில் 60 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பில் 51 சதவீத வாக்குகளும், புத்தளத்தில் 58 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment