Thursday, January 08, 2015
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் தேர்தல் வாக்களிப்பு சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருவதை காலை 7.00 மணிமுதல் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வாக்களிப்பு நிலையங்களில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. கண்காணிப்பு குழுவினர் விஜயம் செய்தனர். எனினும் சாதூரியமாக செயற்பட்டு அதுவரை பிரச்சனைகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் மூலமாகவே ஊகிக்க கூடியதாக இருந்தது.
போலிஸ் அதிகாரிகளும் வாக்களிப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்த வண்ணம் இருந்தனர். பொலிஸ் பாதுகாப்பு திருப்திகரமாக இருந்தது. உத்தியோகத்தர்களும் தேர்தல் கடமையில் கண்டிப்புடன் செற்பட்டனர். இன்னும்சிலர் வாக்களிப்பு நிலையத்திற்கு மிக அண்மித்து நீண்ட நேரமாக நின்று குறித்த சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோருவதாகவும் வாக்காளர்கள் தெரிவித்தனர்.
கடந்தகால தேர்தல்களை விட வாக்களர்கள் படுவான்கரை மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பதை தான் பட்டிருப்புத் தொகுதியல் அவதானித்ததாக தெரிவித்தார். அரசியல் ஆய்வாளர்களும் இதை உறுதி செய்துள்ளனர். வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் நின்று மாகாண சபை உறுப்பினர்கள் நிலமைகளை அவதானித்துள்ளனர். அதேபோல் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும், அரச சார்ப பிரமுகர்களும் வாக்களிப்பிற்கு இடைஞ்சலின்றி நிலமைகளை பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment