Monday, December 15, 2014

ஊவா மாகாண சபையின் ஐ. தே.கட்சி உறுப்பினரான ஜானக திஸ்ஸ குட்டியாரச்சியும் ஜனாதிபதிக்கு ஆதரவு!

Monday, December 15, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் 
ஊவா மாகாண சபை உறுப்பினரான ஜானக திஸ்ஸ குட்டியாரச்சி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
இன்று ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த அவர், ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டார்.

இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்:- நான் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்ட ஒருவன். இந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாமற் போய்விட்டது. இன்று இக்கட்சி பலரின் வலைகளில் சிக்குண்டு,  அக்கட்சியின் வீழ்ச்சிகண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

11வருட காலமாக இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற சந்திரிக்கா குமாரதுங்கவின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி செயல்படுகிறது .எனவே அக்கட்சியை ஆதரிக்காது நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச்செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்குமாறு எமது கட்சி ஆதரவாளர்களை தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டார்.

ஐந்து வருடகாலமாக ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான செயல்படும் ஜானக திஸ்ஸ குட்டியாரச்சி, மஹியங்களை தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமாவார்.

No comments:

Post a Comment