Monday, December 15, 2014
இலங்கை::பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ரூபா 40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (14) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் எம்.எம். தஸ்லிம் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 70 பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



No comments:
Post a Comment