Friday, December 19, 2014

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தகவ்ல்கள்?

Friday, December 19, 2014      
இலங்கை::ஐக்கியதேசிய கட்சியின் பிரதிதலைவர் சஜித்பிரேமதாசாவுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஜனாதிபதியும் அவரது ஆலோசகர்களும் ஆராய்ந்துவருகின்றனர். அடுத்த சில வாரங்களில் நிலைமை இன்னமும் மோசமடைந்தால் இதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறலாம்.

திஸ்ஸ அத்தநாயக்கவும் , சஜித் பிரேமதாசாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், திஸ்ஸவே சஜித்தை பிரதிதலைவர் பதவியில் அமர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நவீன் திசநாயக்க மற்றும், வசந்த சேனநாயக்காவின் வருகை காரணமாகவும், கபீர்காசிம் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டதாலும் சஜித்பிரேமதாசா அதிருப்பதியடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.வழமை போல தேர்தல் பிரச்சாரங்களிலிருந்து அவர் விலகியே நிற்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ருவான், நவீன், வசந்த என்ற மூன்று முடிக்குரிய இளவரசர்கள் ஐக்கியதேசிய கட்சிக்குள் காணப்படுவதால்,தான் கட்சி தலைவராக வருவதற்காக சாத்தியக்கூறுகள் குறைவடைந்துள்ளதாக சஜித் கருதுகின்றார். இதன் காரணமாக தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக திஸ்ஸ அத்தநாயக்க ஊடாக விடுக்கப்படும் வேண்டுகொளை அவர் அனேகமாக எற்றுக்கொள்ளுவார் என அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் முழு வசதிகளையும் பயன்படுத்தி ஐக்கியதேசிய கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களை நாளாந்தம் தொடர்புகொண்டவண்ணமுள்ள திஸ்ஸ , சஜித்தையும் தொடர்புகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment