Friday, December 19, 2014

பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இர­க­சிய உடன்­ப­டிக்கை ஒன்­று­க்கு இணங்­கி­யுள்ளார். அந்த உடன்­ப­டிக்­கையில் உள்ள விட­யங்கள் என்ன?: ஜீ.எல். பீரிஸ் கேள்­வி­!

Friday, December 19, 2014      
இலங்கை::மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்களை வழங்­கு­வ­தில்லை என்­பதும் நீதி­மன்­றத்­தினால் பிரிக்­கப்­பட்ட வடக்கு கிழக்குமாகா­ணங்­களை மீண்டும் இணைப்­ப­தில்லை என்­பதும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் தெளி­வான கொள்­கை­யாகும். ஆனால் இந்த விட­யங்­களில் எதி­ரணி பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடு என்ன என்று வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் கேள்­வி­யெ­ழு­ப்­பினார்.

ஆனால் இந்த விட­யங்­களில் எதி­ரணி பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடு என்ன என்று வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் கேள்­வி­யெ­ழு­ப்­பினார்.

பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இர­க­சிய உடன்­ப­டிக்கை ஒன்­று­க்கு இணங்­கி­யுள்ளார். அந்த உடன்­ப­டிக்­கையில் உள்ள விட­யங்கள் என்ன? அதில் எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள் என்­ன­வென்று நாட்­டுக்கு கூற­வேண்டும். இந்த விட­யங்­களை நாட்டு மக்­க­ளுக்கு கூறாமல் வாக்­கு­களை கேட்­பது எந்­த­வ­கையில் நியாயம்? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடு என்ன? என்றும் அவர் வின­வினார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினால் கொழும்பில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

உலகின் சில நாடு­களில் கடந்த சில தினங்­க­ளாக இடம்­பெற்ற நிகழ்­வு­களை பார்க்­கும்­போது இலங்­கையின் அர­சியல் ஸ்திரத்­தன்மை எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பது யாவ­ருக்கும் புரிந்­தி­ருக்கும். இவ்­வா­றான அர­சியல் ஸ்திரம் கொண்ட நாடு எங்கும் இல்லை. அதனை நாம் அனு­ப­விக்­கின்றோம். பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு இது மிகப்­பெ­ரிய விட­ய­மாகும்.

மாற்­றுத்­திட்டம் என்ன?

மேலும் நாட்டை முன்­கொண்டு செல்­வ­தற்கு அர­சியல் ஸ்திரம் என்­பது மிகவும் முக்­கி­ய­மாகும். ஆனால் எதி­ர­ணியின் சார்பில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளரின் மாற்­றுத்­திட்­டங்கள் என்­ன­வென்­பது யாருக்கும் தெளி­வில்­லாமல் உள்­ளது. அதா­வது தமது நிலைப்­பா­டுகள் கொள்கைள் குறித்து நாட்டு மக்­க­ளுக்கு பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எத­னையும் கூறாமல் இருக்­கின்றார்.

13 குறித்த நிலைப்­பாடு
 
குறிப்­பாக பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இர­க­சிய உடன்­ப­டிக்கை ஒன்­று­ககு இணங்­கி­யுள்ளார். அந்த உடன்­ப­டிக்­கையில் உள்ள விட­யங்கள் என்ன? அதில் எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள் என்­ன­வென்று நாட்­டுக்கு கூற­வேண்டும். இந்த விட­யங்­களை நாட்டு மக்­க­ளுக்கு கூறாமல் வாக்­கு­களை கேட்­பது எந்­த­வ­கையில் நியாயம்? அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடு என்ன?

பொலிஸ் அதி­காரம்

மாகாண சபை­க­ளுக்கு கோரப்­படும் பொலிஸ் அதி­கா­ரங்கள் குறித்து பொது வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்ன? பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்க அவர் தயாரா? வடக்கு கிழக்கை இணைக்­க­வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரு­கின்­றது. இந்த வி்டயத்தில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடு என்ன? இவற்றைக் கூறாமல் மக்­க­ளிடம் வாக்­கு­களை கோர முடி­யுமா? "

நாட்­டுக்கு எதி­ராக செயற்­படும் வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாண சபை­யா­னது நாட்­டுக்கு எதி­ராக துரோ­க­மி­ழை­ககும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது. வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் ஜெனிவா சென்று விசா­ரணைக் குழுவின் கால எல்­லையை நீடிக்­கு­மாறு கோரி­யி­ருந்தார். இவ்­வா­றான செயற்­பா­டு­களில் பொது வேட்­பாளர் எவ்­வாறு பார்க்­கின்றார்? மேலும் வட மாகாண சபையின் ஆளுநர் ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யாக இருக்­கின்றார்.

ஆளு­ந­ருக்கு என்ன நடக்கும்?

இந்­நி­லையில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வே­றறு அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை நீக்­கி­விட்டால் ஆளு­ந­ருக்கு என்ன நட­ககும்? வடக்கு மாகாண சபைக்கு என்ன நடக்கும்? நாட்டின் நிலை என்ன? இந்த விட­யங்கள் குறித்து பொது வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்ன? எதி­ர­ணியில் உள்­ள­வர்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டிக்­க­வேண்டும் என்ற குறு­கிய கால நோக்­கத்­துடன் இணைந்­துள்­ளனர்.

இரு துரு­வங்கள்

பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜாதிக ஹெல உறு­மய மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றுடன் எவ்­வாறு உடன்­ப­டிக்கை செய்ய முடியும்? இரண்டு கட்­சி­களும் இரண்டு துரு­வங்கள். வானத்­தையும் பூமி­யையும் போன்ற கட்­சிகள். கறுப்பு வௌ்ளை போன்ற கட்­சிகள். இந்தக் கட்­சி­க­ளுடன் எவ்­வா­றான இணக்­கப்­பாட்டை மேற்­கொண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சி­ய­மைப்பார்? இந்தக் கூட்­டணி குழம்­பிய குட்­டை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. பரஸ்­பரம் விரோ­த­மான கருத்­துக்­களை கொண்­டுள்­ளது. இது நாட்டை அழிக்கும் சக்­தி­க­ளு­ககு பாரிய நன்­மை­யாக அமை­யப்­போ­கின்­றது.

புலிகளின் ஈழக்­க­னவு தொடர்­கி­றது

புலிகளின் ஈழம் கனவு இன்னும் கைவி­டப்­ப­ட­வில்லை. அதன் வடிவம் மட்­டுமே மாறி­யுள்­ளது. பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­வது போன்று 100 நாட்­களில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை நீக்க முடி­யாது. ஜனா­தி­பதி பத­விக்கு வரு­கின்­றவர் அந்தப் பத­வியை ரத்துச் செய்ய முடி­யாது. அதற்கு சட்­டத்தில் இட­மில்லை. அந்த அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­துக்கே உள்­ளது. இதனை செய்­வ­தற்கு மைத்­தி­ரி­பா­ல­வுக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் இல்லை. மேலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் நடத்­தப்­ப­ட­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தை கலைத்தால் கூட மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்­காது.

சிறி­சே­னவின் முகத்­தைக்­காட்டி ரணில்

இது வித்­தி­யா­ச­மான முயற்­சி­யாக தெரி­கின்­றது. அதா­வது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முகத்தைக் காட்டி ரணில் விக்­ர­ம­சிங்க அதி­கா­ரத்­துக்கு வர முயற்­சிக்­கின்றார். மறை­மு­க­மாக இதனை செய்­ய­பார்க்­கின்­றனர். மாற்றம் என்­பது இறுதி நோக்கம் அல்ல. ஆசிய மக்கள் வெறு­மனே தற்­கா­லிக மாற்­றங்­களை விரும்­பு­கின்ற மக்கள் அல்ல. ஜனா­தி­பதி நான்கு வரு­டங்­களில் தேர்­த­லுக்கு சென்­றுள்­ளதைப் போன்று ஜப்பான் பிர­த­மரும் கால எல்லை முடியும் முன்னர் தேர்­த­லுக்கு சென்றார். பெரும்­பான்மை ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்ளார். மக்­க­ளுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்­தையும் நாட்டை அபி­வி­ருத்­தி­யையும் முன்­னெ­டுத்தால் எத்­த­னை­வ­ரு­டங்கள் வேண்­டு­மா­னாலும் கட்­சிகள் ஆட்­சியில் இருக்­கலாம். ஜன­வரி எட்டாம் திகதி நள்­ளி­ரவு 12 மணிக்கு விமான நிலைய கத­வு­களை மூடு­வ­தாக கூறு­கின்­றனர். எனவே இது தீர்க்­க­மான தேர்தல். மக்கள் சிந்­தித்து முடி­வெ­டுக்­க­வேண்டும்.

சதி உள்­ளது

கேள்வி: சர்­வ­தேச சதி என்­பது பழைய விட­ய­மல்­லவா?

பதில்: அவ்­வாறு கூற முடி­யாது. சுரேன் சுரேந்­திரன் என்ற புலி உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி தோற்­றதும் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­போ­வ­தாக கூறி­யுள்ளார். இதன் மூலம் என்ன தெரி­கின்­றது?

கேள்வி: ஜனா­தி­ப­தியை அவ்­வாறு கொண்­டு­செல்ல விட­மாட்டோம் என்று மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்­ளாரே?

பதில்: அது யதார்த்­த­மா­காது. அந்த தீர்ப்பை மக்கள் வழங்­க­வேண்டும்.

கேள்வி: மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள் வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் குறித்து பொது வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்­ன­வென்று கேட்­கின்­றீர்கள்? அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன?

பதில்: மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் தெளிவான கொள்கையாகும். எமது இந்த நிலைப்பாட்டை இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் கூறிவிட்டோம். இது தெளிவான நிலைப்பாடாகும். ஆனால் இந்த விடயங்களில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்பதனை கூறவேண்டும்.

வடக்கு கிழக்கு

அது வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டன. அவ்வாறு நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதில்லை என்பது எமது திட்டவட்டமான கொள்கையாகவுள்ளது. அது மட்டுமன்றி பிரிக்கபபட்ட மாகாண சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டுள்ளது.

No comments:

Post a Comment